மோசமான சாலை இருந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
11:31 AM Jun 27, 2024 IST | Web Editor
Advertisement
மோசமான சாலை இருந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் மத்திய நெடுஞ்சாலைத்துறை பல்வேறு வழித்தடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்துள்ள நிலையில், அந்த சாலைகளை பயன்படுத்துவதற்காக சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சில பராமரிப்பற்ற சாலை தடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதும், ஒரே வழித்தடத்தில் அடுத்தடுத்து பல சுங்கச்சாவடிகளை அமைத்து வசூலிப்பதும் வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் டெல்லியில் நடந்த செயற்கை கோள் உதவியுடன் வாகனங்களை கண்காணித்து கட்டணம் வசூலிக்கும் திட்டம் குறித்த கூட்டத்தில் பேசிய மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சுங்க கட்டணம் வசூலிப்பது குறித்த புதிய நெறிமுறைகளை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் “சாலைகள் சிறப்பாக உள்ள இடங்களில் மட்டும்தான் சுங்கக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமலும், மோசமாகவும் இருக்கும் இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது. எந்த இடத்திலும் சேவை சிறப்பாக இருந்தால் மட்டுமே உரிய கட்டணம் செலுத்த வேண்டும்.
சேவை முறையாக இல்லாவிட்டால் கட்டணம் தேவை இல்லை. குண்டும் குழியுமாகவும், சேறு நிறைந்ததாகவும் சாலைகளை வைத்துக் கொண்டு அங்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க முற்பட்டால், மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.என தெரிவித்துள்ளார்.
Advertisement