For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாடு முழுவதும் நாளை மறுநாள் நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு!

04:46 PM Jun 01, 2024 IST | Web Editor
நாடு முழுவதும் நாளை மறுநாள் நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு
Advertisement

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடியில் வருகின்ற ஜூன் 3-ம் தேதி நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடியில் வரும் ஜூன்  3ம் தேதி நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடி உள்ளது. இதில், 339 மாநில சுங்கச்சாவடிகள் ஆகும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டு தோறும் இரண்டு சுங்கச்சாவடி கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது. அதன்படி முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகள் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதன்மை சுங்கச்சவாடி கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என தகவல் வெளியானது.  பின்னர் மார்ச் 30 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதை அடுத்து சுங்கச்சாவடி கட்டண மாற்றம் இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருந்தது.

இதையும் படியுங்கள் : இந்தியா கூட்டணி வென்றால் பிரதமர் ஆகத் தயார் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினாரா? உண்மை என்ன?

இந்நிலையில்,  நாடு முழுவதும் ஜூன் 1ம் தேதி (இன்று) மக்களவை தேர்தலுக்கான  இறுதிக்கட்ட வாக்குபதிவு முடிவடைவதை அடுத்து,  ஜூன் 3ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடி கட்டணம் மாற்றம் அமலுக்கு வருகிறது.  அதன்படி,  நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணம் மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்படுகிறது.

மாதந்திர சுங்கச்சாவடி கட்டணமும் ரூ.100 முதல் ரூ.400 வரை உயர்த்தப்படுகிறது.
தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலைகளில் 55 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், முதற்கட்டமாக அரியலூர் மணகெதி,  திருச்சி கல்லக்குடி,  வேலூர் வல்லம், திருவண்ணாமலை இனம் கரியாந்தல்,  விழுப்புரம் தென்னமாதேவி ஆகிய 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.  சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு மத்திய அரசுக்கு லாரி உரிமையாளர்கள்,  வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement