Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

GPS மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் - பொய்யான தகவல் என மத்திய அரசு விளக்கம்!

ஜிபிஎஸ் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பரவும் தகவல் உண்மையல்ல என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
05:21 PM Apr 18, 2025 IST | Web Editor
Advertisement

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு மத்திய அரசால் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம். இதனை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிர்வகித்து வருகின்றது. மேலும், பல சுங்க சாவடிகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால் இதற்கு தீர்வு காணும் வகையில், Fastag நடைமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் பயணிகள் காத்திருக்கும் நேரம் ஆனது குறைக்கப்பட்டது.

Advertisement

இந்த நிலையில் மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம் அதாவது, நாடு முழுக்க அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஜிபிஎஸ் (GPS) அடிப்படையிலான கட்டண வசூலை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முறை வரும் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் நடைமுறை குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகமும், நெடுஞ்சாலை ஆணையமும் எந்த முடிவும் எடுக்கவில்லை" தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் மட்டும் ANPR-FASTag-அடிப்படையிலான தடையற்ற கட்டண நடைமுறை இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags :
Central governmentcollectedgpsINFORMATIONToll charges
Advertisement
Next Article