Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்தியாவில் தினமும் ரூ.1 கோடிக்கும் மேல் வசூலாகும் சுங்கச்சாவடிகள்!

03:10 PM Aug 03, 2024 IST | Web Editor
Advertisement

நாட்டில் இயங்கி வரும் சுங்கச்சாவடிகளில், 5 சுங்கச்சாவடிகளில் மட்டும் நாள் ஒன்றுக்கு தலா ரூ.1 கோடி வசூல் ஆகியுள்ளது என மத்திய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

நாடு முழுவதும் மிகச் சரியாக 983 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பாதிக்கும் மேற்பட்டவை கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டப்பட்டவை. இப்படி கிட்டத்தட்ட 1000 சுங்கச்சாவடிகள் இயங்கி வரும் நிலையில், இதில் ஐந்து சுங்கச்சாவடிகள், நாள் ஒன்றுக்கு தலா ரு.1 கோடிக்கும் அதிகமாக வசூலித்துவருகின்றன. அதில், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சுங்கச்சாவடிகள் தான் இப்படி நாள்தோறும் கோடிக்கணக்கில் கட்டணத்தை வசூலித்து வருகின்றன.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் தரவுகளின்படி, குஜராத் மாநிலத்தில் உள்ள பரதனா சுங்கச்சாவடி, கடந்த 2023 - 24ஆம் நிதியாண்டில், ரூ.475.65 கோடி வசூலித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இது வசூலித்த தொகை ரூ.2,043.80 கோடியாக உள்ளது. இதுதான் நாட்டிலேயே அதிக சுங்கக் கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடி என்றும் அறியப்படுகிறது.

இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்பூர் சுங்கச்சாவடி. இங்கு கடந்த நிதியாண்டில் ரூ.429.65 கோடி ஈட்டப்பட்டுள்ளது. நாட்டிலேயே இதுதான் இரண்டாவது அதிகபட்ச வசூலாக உள்ளது.

மூன்றாவது இடத்தில் ரூ.4,026 கோடியுடன் ஹரியானா மாநிலத்தின் கரோண்டாவும், 4வது இடத்தில் ரூ.364 கோடியுடன் மேற்கு வங்கத்தின் சுங்கச் சாவடியும், ஐந்தாவது இடத்தில் ரூ.364 கோடியுடன் உத்தரப்பிரதேச மாநில சுங்கச் சாவடியும் இடம்பெற்றுள்ளன.

இதையும் படியுங்கள் : “அமெரிக்க தனிநபர் வருமானத்தில் கால் பாதியை இந்தியா எட்ட 75 ஆண்டுகள் ஆகலாம்” – உலக வங்கி திடுக்கிடும் அறிக்கை!

கடந்த 2019 - 20 மற்றும் 2023-24ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நாடு முழுவதும் இவ்வாறு வாகன ஓட்டிகளிடம் வாங்கப்பட்ட சுங்கக் கட்டணம் ரூ.1.94 லட்சம் கோடி ஆகும். அதிக சுங்கக் கட்டணம் வசூலித்த மாநிலங்களின் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இங்கு மட்டும் ரூ.23,736.45 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சுங்கச் சாவடிகளைக் கொண்ட மாநிலங்களின் வரிசையில்முதலிடத்தில் இருப்பது ராஜஸ்தான். இங்கு மட்டும் 142 சுங்கச் சாவடிகள் உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 102 உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 457 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2022 - 23ல் மட்டும் 107 சுங்கச்சாவடிகள் உதயமாகியிருக்கின்றன. இதில், 58 ராஜஸ்தான் மாநிலத்திலும், 57 மத்தியப் பிரதேசத்திலும், 52 உத்தரப்பிரதேசத்திலும் அமைக்கப்பட்டவை.

Tags :
1crorecollectGujaratharyanaIndiaRajasthanTollGateuttar pradeshWest bengal
Advertisement
Next Article