“இன்று இஸ்லாமியர்கள், நாளை பிற சிறுபான்மையினருக்கு எதிராக முடியும்” - வக்ஃப் திருத்த சட்டம் குறித்து திருமாவளவன் எம்.பி. பேட்டி!
விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன், அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது , “பிரதமர் மோடி இலங்கைக்கு சென்று வரும் சூழலில் தமிழ்நாட்டு மக்களின்
எதிர்பார்ப்பு என்ன என்பதை தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் நினைவு படுத்துகிறது.
குறிப்பாக தமிழர்களுக்கு உரித்தான தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உரித்தான
கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும். அதற்கு மத்திய அரசு புதிய நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும் என்கின்ற தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்த தீர்மானத்தை ஒட்டி நாடாளுமன்றத்தில் மக்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் கூட்டமை கட்சிகளின் சார்பிலும் கோரிக்கை எழுப்பப்பட்டது. அதை வலியுறுத்தி வெளிநடப்பு மேற்கொண்டோம்.
இன்று(ஏப்ரல்.050 பிரதமர் இலங்கையில் இருக்கின்ற சூழலில் தமிழ்நாடு மக்களின்
உணர்வுகளை மதித்து காலம் காலமாக விடுத்து வருகின்ற கோரிக்கையை
நிறைவேற்றக்கூடிய வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டு மீனவர்கள் சுதந்திரமாக கட்சி தீவு வரை சென்று மீன் பிடிப்பு
உரிமைகளை வலியுறுத்த வேண்டும். ஏற்கெனவே மத்திய அரசு வீடுகளை கட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இன்னும் லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் சொந்த கிராமத்திற்கு செல்ல முடியவில்லை ,வாழ முடியவில்லை. ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பெண்மணிகள் கணவனை இழந்து பரிதவிக்கும் அவலம் நீடிக்கிறது. எனவே அந்த மண்ணின் மைந்தர்கள் சுதந்திரமாக அங்கு வாழ வேண்டுமானால் காடுகளை ஆக்கிரமித்து இருக்கிற சிங்கள ராணுவத்தை அப்புறப்படுத்த வேண்டும்.
சிங்களர்களின் குடிப்பெயர்வதை தடுத்து நிறுத்த வேண்டும் அதற்குரிய
நடவடிக்கைகளை பிரதமர் சொல்வது தான் ஈழத் தமிழர்களுக்கு செய்கின்ற ஒரு
பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும். இலங்கை தேசத்திற்கும் இந்திய தேசத்திற்குமான இடையேயான உறவை நல்லிணக்கமாக
பேணுவதற்கு அவர்கள் இந்த விருதை வழங்கி இருக்கலாம் வாழ்த்துக்கள்.
வக்ஃப் திருத்த சட்டம் அடாவடித்தனமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது நள்ளிரவுக்கு மேல் நிர்வாகத்தை நடத்தி இந்திய அரசியல் வரலாற்றில் இல்லாத அளவிற்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த அநீதியை மோடி அரசு அரங்கேற்றி இருக்கிறது. அவர்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லை. ஆனால் கூட்டணி கட்சிகள் கட்டுக்குள் வைத்து இந்த சட்டத்தை நிறைவேற்றி இருப்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு பெறும் தீங்கை விளைவிக்கும்.
திமுக உள்ளிட்ட எதிர் கட்சி ஒருங்கிணைந்து 232 பேர் எதிர்த்து வாக்களித்து இருக்கிறோம் மக்களவையில் 95 பேர் எதிர்த்து வாக்களித்திருக்கிறோம் மாநிலங்களவை ஒரு கடுமையான எதிர்ப்புக்கு இடையே இந்த
சட்டத்தை அவர்கள் நிறைவேற்றி இருப்பது சிறுபான்மை மக்களை அச்சுறுத்துவதற்கான நடவடிக்கைகள். இன்று இஸ்லாமியர்கள் நாளை கிருத்துவர், பௌத்தர், சமணர், பார்சி என்று சிறுபான்மை மக்களுக்கு எதிராக போய் முடியும்.
இந்திய சமூக நல்லிணக்கத்தை வெகுவாக பாதிக்கும் இந்த சட்டத்தை நிறைவேற்றிய நாள் இந்திய அரசு வரலாற்றுக்கு ஒரு கருப்பு நாள் என்று வரலாறு பதிவாகியுள்ளது.