For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் இன்று (ஜூன் 26) பள்ளிகளுக்கு விடுமுறை!

07:02 AM Jun 26, 2024 IST | Web Editor
கூடலூர்  பந்தலூர் தாலுகாக்களில் இன்று  ஜூன் 26  பள்ளிகளுக்கு விடுமுறை
Advertisement

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் கோவை மாவட்ட ஆட்சியர் இன்று விடுமுறை அறிவித்துள்ளார். 

Advertisement

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று 26-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை 27-ம் தேதி  தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிகு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 28-ம் தேதி முதல் ஜூலை 01-ம் தேதி வரை  தமிழகத்தில் ஒரிரு  இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை துவங்கியது முதல், வால்பாறையில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இன்றும் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக காரணமாக வால்பாறையில் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.

அதேபோல நீலகிரி மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக  பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் சிரமத்திற்கு உள்ளாககூடும் என்பதால் ,கூடலூர், பந்தலூர் ஆகிய 2 தாலுக்காக்களிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். மழையின் தீவிரத்தை பொறுத்து மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement