Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சட்டப்பேரவையில் காரசார விவாதம்: கிளாம்பாக்கம் பேருந்து முனைய பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும் என முதலமைச்சர் உறுதி!

01:51 PM Feb 13, 2024 IST | Web Editor
Advertisement

சட்டப்பேரவையில் திமுக,  அதிமுக இடையே காரசார விவாதம் ஏற்பட்ட நிலையில், சிறுசிறு பிரச்னைகள் மட்டுமல்ல,  பெரிய பிரச்னைகளும் தீர்த்து வைக்கப்படும்  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisement

2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரின் 2வது நாள் அமர்வு தொடங்கிய நிலையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்துக்காக சட்டப் பேரவை இன்று கூடி நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள் ; 'டெல்லி சலோ' போராட்டம் - விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு!

இந்நிலையில்,  சட்டபேரவை கூட்டத்தொடரின் 2வது நாள் அமர்வில் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் சேகர்பாபு இடையே விவாதம் நடைபெற்றது.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:  "கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதில் அவசரம் காட்டிவிட்டனர்.  அதனால்தான் பயணிகளுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது.  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிறுசிறு பிரச்னைகளை சரி செய்ய வேண்டும்.

அமைச்சர் சேகர்பாபு விளக்கம்: "கிளாம்பாக்கம் பேருந்து முனையம் குறித்து யாரும் புகார் கூறவில்லை.  கிளாம்பாக்கத்தில் 100 கோடி அளவிலான பணியை திமுக அரசு மேற்கொண்டது.  கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் 6 மாதத்திற்குள் அமைக்கப்படும். கிளாம்பாக்கத்தில் அடிப்படை வசதி இல்லை என்று யாரும் குறை சொல்லவில்லை.  மேலும் இந்த பேருந்து நிலையம் தொடர்பாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.  இரவு நேரத்தில் பேருந்துகள் இல்லை என்ற குறைபாடு மட்டும்தான் வருகிறது"

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் தொடர்பாக சிறுசிறு பிரச்சனைகள் குறித்து ஈபிஎஸ்,  அமைச்சர் சேகர்பாபு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து, சிறுசிறு மற்றும் பெரிய பிரச்னைகளையும் தீர்த்த பிறகே கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை திறந்திருக்க வேண்டும் என ஈபிஎஸ் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது;

"கிளம்பாக்கத்தில் சிறுசிறு பிரச்னைகள் மட்டுமல்ல,  பெரிய பிரச்னைகளும் இருந்தன. அதை தீர்த்து வைத்துள்ளோம்.  எதிர்க்கட்சித் தலைவர் சொல்லும் சிறிய பிரச்னைகளும் தீர்த்து வைக்கப்படும் " என்று விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Tags :
AIADMKAssemblyயCMOTamilNaduEdappadipalanisamyEPSMKStalinTNAssembly2024TNGovt
Advertisement
Next Article