For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#TirupatiLaddu விவகாரம் – நெய் சப்ளை செய்த #ARDairyFoods நிறுவனம் மீது பாய்ந்த நடவடிக்கை!

10:39 AM Sep 26, 2024 IST | Web Editor
 tirupatiladdu விவகாரம் – நெய் சப்ளை செய்த  ardairyfoods நிறுவனம் மீது பாய்ந்த நடவடிக்கை
Advertisement

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் விநியோகம் செய்த திண்டுக்கல்லைச் சார்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் மீது தேவஸ்தான நிர்வாகம் போலீசில் புகார் அளித்நிலையில், 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Advertisement

ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த செப். 19-ம் தேதி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்தார்.

லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை குஜராத்தில் உள்ள ஒரு ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு , பாமாயில் உள்ளிட்டவை கலந்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இந்து சேனா தலைவரான சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யின் தயாரிப்பு நிறுவனமான திண்டுக்கல்லை சேர்ந்த சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து, மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடந்த 21ம் தேதி காலை 9.30 மணிமுதல் நள்ளிரவு 11.30 மணிவரை திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தில் சோதனை செய்தனர்.

இந்த சூழலில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் வினியோகம் செய்த திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பதி கிழக்குப் போலீஸ் நிலையத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் கொள்முதல் பிரிவு பொது மேலாளர் முரளிகிருஷ்ணா புகார் அளித்தார். இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானம் அளித்த புகாரின் அடிப்படையில், திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தின் மீது 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கலப்பட பொருள் கொடுத்து இறப்பை ஏற்படுத்த முயன்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement