திருநெல்வேலி மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு எப்போது? -வெளியான புது அறிவிப்பு!
07:10 AM Dec 30, 2023 IST | Web Editor
Advertisement
மழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த வாரம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், அம்மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் அரையாண்டு தேர்வை முழுமையாக எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன. இதற்கிடையில், மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவித்த படியே டிசம்பர் 22 ஆம் தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தன.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஜனவரி மாதம் 1-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும், 6 முதல் 10-ம் வகுப்புகளுக்க ஜனவரி 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 4-ந்தேதி அறிவியல், 6-ந்தேதி கணக்கு தேர்வு, 9-ந்தேதி சமூக அறிவியல் தேர்வு, 10-ந்தேதி உடற்கல்வி தேர்வு நடத்தப்பட இருக்கிறது. 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்தல் டிசம்பர் 7-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. கனமழை, வெள்ளம் காரணமாக தேர்வு நடந்து கொண்டிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement