For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

08:16 AM Feb 14, 2024 IST | Web Editor
திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Advertisement

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் கோயிலில் மாசித்திருவிழா இன்று அதிகாலை 4.52 மணியளவில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள்  செய்யப்பட்டு கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த மாசித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், கோயிலுக்கு வருகை தந்து கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படியுங்கள் : இயக்குநர் கே.பாக்யராஜின் அதிர்ச்சி குற்றச்சாட்டு! உண்மையை வெளிக்கொண்டு வந்த தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு!

இதையடுத்து, 12 நாட்கள் நடைபெறும் இந்த மாசித் திருவிழாவில் நாள்தோறும் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் பிப்ரவரி 20 ஆம் தேதி சிவப்பு சாத்தி வீதி உலா நடைபெற உள்ளது. இதில் அலங்காரம், ஆராதனைகள் என சாமிக்கான அம்சங்கள் அனைத்தும் சிவப்பாக இருக்கும். அதேபோல், 21 ஆம் தேதி பச்சை சாத்தி வீதி உலா நடைபெறும். அன்றைய தினம் சாமி பச்சை அலங்காரத்தில் சப்பரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். மாசித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Tags :
Advertisement