"சிறைக்கு யார் செல்வார்கள் என்று விரைவில் காலம் பதில் சொல்லும்" - ஓ. பன்னீர்செல்வம் பதிலடி!
ஓபிஎஸ் விரைவில் திஹார் சிறைக்கு செல்வார் என்ற எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறைக்கு யார் செல்வார்கள் என்று விரைவில் காலம் பதில் சொல்லும் என தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் ஓபிஎஸ் சார்பில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
அதிமுகவின் தொண்டர்கள் தான் பொதுச்செயலாளர் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை யாராலும் மாற்ற முடியாத வகையில் எம்ஜிஆர் வலுவாக இயக்கத்தை உருவாக்கினார். விலைக்கு வாங்கி பொறுப்பு ஏற்கும் முறை எதிர்த்து தான் உரிமை மீட்பு குழு அமைக்கப்பட்டது.
அதிமுக பணத்தால் மட்டுமே இயக்கத்தில் பதவி பெறமுடியும் உள்ள சூழலில்
உள்ளவர்களை, கட்சியை விட்டு நீக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகிறது.
ஜெயலலிதா தான் நிரந்தரமாக பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்ற தீர்மானமத்தை கல் நெஞ்சம் படைத்த இபிஎஸ் ரத்து செய்து உள்ளார். இபிஎஸ்
அளவற்ற ஆசை காரணமாக தான் ரத்து செய்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் கூறியதாவது:
அதிமுக சட்ட விதிகளை கபளிகரம் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி கொடுச்செயலை தடுத்து நிறுத்தி எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்களுக்கு தந்த உரிமை மீட்டு எடுக்க புரட்சி பயணத்தை தொடங்கி உள்ளோம். விரைவில் ஓபிஎஸ் சிறைக்கு செல்வார் என இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு யார் சிறைக்கு செல்வார்கள் என்று காலம் விரைவில் பதில் சொல்லும் என்றார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று தொண்டர்கள் மற்றும்
பொதுமக்களை சந்திப்போம். ஜெயலலிதாவிற்கு நான் ரூ.2 கோடி கடன் கொடுத்ததை எடப்பாடி பழனிசாமி தவறாக புரிந்து கொண்டார். நான் அதிமுக பொருளாளராக இருந்த போது பொருளாளர் என்ற முறையில் கட்சி நிதி ரூ.2 கோடியை என்னிடம் கடனாக அவர் கேட்டதன் பேரில் வங்கி காசோலை மூலம் தந்தேன். அவர் அதை ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிட்டார்.
தெளிவாக கட்சியின் வரவு செலவு கணக்குகளை தெளிவாக சொல்லி உள்ளேன். இதை தவறாக புரிந்து கொண்டார். நான் ஜெயலலிதாவிற்கு கடன் கொடுக்க தகுதி இல்லை என்று தெரியப்படுத்துகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவை தலைசிறந்த நாடாகவும், உலக நாடுகளில் முன்னிலை பெறும் நாடாகவும் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பான ஆட்சியை தந்துள்ளார்.
இதையும் படியுங்கள்: தேமுதிக தலைவர் ‘கேப்டன்’ விஜயகாந்த் காலமானார்!
இந்த நல்லாட்சி தொடர 2024-ம் ஆண்டு நாடளுமன்ற தேர்தலில் முழுமையாக பாஜக கட்சி வெற்றி பெற்று 3-வது முறையாக பிரதமராக நரேந்திர மோடியே வரும் எண்ணத்தில் பணியாற்றி வருகிறோம். நான் சில விஷயங்கள் சொன்னால் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வார்கள் என்று சொல்வது ரகசியம். அதை சொல்ல மாட்டேன். இது குறித்து மக்களுக்கு சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்வேன். என்னை பார்த்தால் எடப்பாடி பழனிசாமிக்கு பயங்கரவாதி போல் தெரிகிறதா என்று கேள்வி எழுப்பினார்.
கொடநாடு பிரச்னையில் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடனே 100 நாட்களில் நான்
கண்டுபிடித்து தண்டனையை வழங்குவேன் என்றார். ஆனால் ஸ்டாலின் முதலமைச்சராக வந்த போதும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது யார் இணக்கமாக உள்ளார்கள் புரிகிறதா என விமர்சனம் செய்தார்.
மேலும் அவர், வெள்ள நிவாரணம் முறையாக வழங்கவில்லை என ஒன்றிய அரசை எடப்பாடி பழனிசாமி உண்மையாகவே கண்டிக்கிறாரா என கேள்வி எழுப்பினார். ஒன்றிய அரசு கேட்ட நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை என்று மாநில அரசு சொல்வது வாடிக்கையான ஒன்று. என்ன வரன்முறை உள்ளதோ அதன்படி மத்திய அரசு நிதி வழங்கும் என்றார்.