Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

07:08 AM Dec 01, 2023 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மாவட்டங்களில் இன்று (டிச. 1) லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

அந்தமான் அருகே உருவாகி, வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 3-ம் தேதி வாக்கில் புயலாகவும் வலுப்பெறும். 4-ம் தேதி அதிகாலை வடதமிழகம் – தெற்கு ஆந்திர கடலோரபகுதிகளில் நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் தாக்கத்தால் தமிழ்நாட்டில் வரும் 4-ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் கனமழையும், டெல்டா மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகபட்டினம் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
bay of bengalChennaiChennai FloodsChennai rainsCycloneHeavy rainIMDMichaungMichaung CycloneNew CycloneNews7Tamilnews7TamilUpdatesRainthiruvallurTn Rains
Advertisement
Next Article