For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இடி, மின்னலுடன் மழை - உஷார் மக்களே! சென்னை வானிலை நிலவரம்!

சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
04:50 PM Aug 05, 2025 IST | Web Editor
சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடி  மின்னலுடன் மழை   உஷார் மக்களே  சென்னை வானிலை நிலவரம்
Advertisement

சென்னை வானிலை மையம் அறிவிப்பின்படி, இன்று (05-08-2025), சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisement

அதிகபட்ச வெப்பநிலை சுமார் 34° செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸ் வரையும் இருக்கும். நாளை (06-08-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சுமார் 34-35° செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸ் வரையும் இருக்கக்கூடும்.

மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு முன், எச்சரிக்கைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

05-08-2025 முதல் 07-08-2025 வரை தென்தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

05-08-2025 முதல் 08-08-2025 வரை தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். 09-08-2025 அன்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும், 05-08-2025 மற்றும் 06-08-2025 அன்று மத்தியமேற்கு அரபிக்கடலின் பெரும்பாலான பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். இதே நாட்களில், மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கர்நாடகா-கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

இதனை தொடர்ந்து 07-08-2025 முதல் 09-08-2025 வரை மத்தியமேற்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
Advertisement