For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தக் லைஃப்" - படப்பிடிப்பு இன்று தொடங்கியது.!

12:37 PM Jan 24, 2024 IST | Web Editor
 தக் லைஃப்    படப்பிடிப்பு இன்று தொடங்கியது
Advertisement

நடிகர் கமல்ஹாசனின் 234-வது படமான "தக் லைஃப்"  திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

நடிகர் கமல்ஹாசனின் 234-வது படம் தக் லைஃப். நாயகன் படத்துக்கு பிறகு, கமல்ஹாசன், மணிரத்னம் மீண்டும் இணையும் படம் தக் லைஃப். இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

இப்படத்தில் ஜெகமே தந்திரம், மதுரம், ஜோசப் போன்ற படங்கள் மூலமாக புகழ்பெற்ற மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்துள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இதில் துல்கர் சல்மானும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
Advertisement