Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பணமோசடியில் ஈடுபட்ட #AthistamFarmAlliedLtd உரிமையாளர்கள் மூவர் கைது - மதுரையில் பரபரப்பு!

07:52 AM Sep 16, 2024 IST | Web Editor
Advertisement

அதிர்ஷ்டம் பார்ம் அலைடு லிமிடெட் என்ற நிதிநிறுவனத்தை நடத்தி உரிமையாளர்கள் பணமோசடியில் ஈடுபட்டதாக மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement

மதுரை மாநகர் வடக்கு பெருமாள் மேஸ்திரி தெரு பகுதியில் அதிஷ்டம் பார்ம் அலைடு லிமிடெட் என்ற நிதிநிறுவனம் செயல்பட்டுவந்துள்ளது. இந்நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு ஆரம்பித்து அதில் காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுத் தவணையாகவோ பணம் செலுத்தினால் முதிர்வு காலத்தில் அதிகலாபம் பெறலாம் எனவும், போனஸ் தொகையுடன் விபத்துக்காப்பீடு பெறலாம் என்பதோடு, முதலீடு செய்யும் தொகைக்கு முதிர்வு காலம் முடிந்தவுடன் 10 சதவிகிதம் ஊக்கத்தொகையுடன் சேர்த்து திரும்ப பெறலாம் என விளம்பரப்படுத்தியுள்ளனர். மேலும், இதை நம்ப வைத்து பலரிடம் பல லட்சம் ரூபாய் அளவிற்கு மோசடி செய்து ஏமாற்றிவிட்டதாக கூறி முன்னமலை என்பவர் மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் இந்த புகார் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து முதலீட்டார்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக அதிஷ்டம் பார்ம் அலைடு லிமிடெட் என்ற நிதிநிறுவனத்தை நடத்திவந்த சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், அவரது மனைவி வெண்ணிலா மற்றும் சாந்தி ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து 3 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் அடிப்படையில் இவர்கள் நிதிநிறுவனம் நடத்தி ஏமாற்றிய சென்னை ராஜா அண்ணாமலைபுரம், திருப்புவனம், காரைக்குடி மற்றும் மதுரை உட்பட 5 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவினர் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதோடு, புகார் தொடர்பான தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள் : கையில் எலும்பு முறிவுடன் விளையாடிய #NeerajChopra | வெறும் 1 சென்டி மீட்டரில் நழுவிய தங்கம்… 

இந்நிலையில் அதிஷ்டம் பார்ம் அலைடு லிமிட்டெட் மற்றும் அதிஷ்டம் ரியல் எஸ்டேட் ( "Athistam Farm Allied Ltd and Athistam Real Estate" ) என்ற நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து முதலீட்டு பணம் திரும்ப கிடைக்காத பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் மதுரை தபால்தந்திநகர் விரிவாக்கம், சங்கரபாண்டியன் நகர் பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.

மேலும் இதுபோன்ற போலி நிதிநிறுவனங்களில் பொதுமக்கள் தங்களது கடும் உழைப்பின் மூலம் சேர்த்த பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் எனவும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மதுரையில் நியோ மேக்ஸ் நிறுவனம் பல்லாயிரம் கோடி ரூபாய் பொதுமக்களிடம் முதலீடாக பெற்று மோசடி செய்த விவகாரம் மதுரையில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் மீண்டும் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட அதிர்ஷ்டம் ஃபார்ம் அலைடு லிமிட்டெட் என்ற நிதிநிறுவனமும் பல ஆயிரம் முதலீட்டார்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
arrestedathirstam pharm allied limitedFinance CompanyMaduraiNews7Tamilnews7TamilUpdatesPolice
Advertisement
Next Article