For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தற்போதைய இந்திய தேர்வு முறையை பணம் இருப்பவர்களால் விலைக்கு வாங்க முடிகிறது" - நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச்சு!

11:55 AM Jul 22, 2024 IST | Web Editor
 தற்போதைய இந்திய தேர்வு முறையை பணம் இருப்பவர்களால் விலைக்கு வாங்க முடிகிறது    நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச்சு
Advertisement

"தற்போதைய இந்திய தேர்வு முறையை பணம் இருப்பவர்களால் விலைக்கு வாங்க முடிகிறது" என நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்தது. இந்த கூட்டத் தொடரில் மக்களவையின் புதிய உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்தக் கூட்டம் நேற்று  காலை 11 மணிக்கு நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் பிரதான கமிட்டி அறையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய், நீட் விவகாரங்கள் மற்றும் துணை சபாநாயகர் பதவி குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறை போன்ற மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதாகக் அவர் குற்றச்சாட்டு சாட்டினார். அதேபோல உத்தரபிரதேசத்தில் கன்வார் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவு கடைகளில் பெயர் பலகைகள் குறித்து சமாஜ்வாதி கட்சி எம்பி ராம் கோபால் யாதவ் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று  தொடங்கிய நிலையில் வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறுகிறது.  இதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாவது..

“2047-ல் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பட்ஜெட் கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். அடுத்த 5 ஆண்டுகள் நாட்டின் நலனுக்காகவும், ஏழை, விவசாயிகள், பெண்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவோம்; மக்களின் வளர்ச்சிக்காக எவ்வளவு போராட முடியுமோ, அவ்வளவு போராடி சிறப்பான ஆட்சியை தருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து இதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததாவது..

“ 7 ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிவு ஏற்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வினாத்தாள் கசிவு குறித்து தற்போது நீதிமன்றத்தில் வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. பாட்னாவில் இருக்கும் ஒரே ஒரு மையத்தில் மட்டுமே வினாத்தாள் கசிவு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணையும் நடைபெறுகிறது. அனைத்து இடங்களிலும் முறைகேடு நடந்திருப்பதாக கூறுவது தவறு” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீட் விவகாரம் மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தெரிவித்ததாவது..

“ நீட் தேர்வு முறையில் சிக்கல்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பணம் இருப்பவர்களால் இந்திய தேர்வு முறையை விலைக்கு வாங்க முடிகிறது. அமைப்பு ரீதியாக சிக்கல்கள் உள்ள நீட் தேர்வு முறையை எப்படி சரி செய்யப்போகிறீர்கள். மில்லியன் கணக்கான மாணவர்கள் இந்திய தேர்வு முறையை மோசடியான ஒன்று என நம்புகின்றனர் “ என தெரிவித்தார்.

Tags :
Advertisement