Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும்” - செங்கோட்டையன் வலியுறுத்தல்!

”அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என முன்னள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.
12:07 PM Sep 05, 2025 IST | Web Editor
”அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என முன்னள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement

ஈரோடு மாவட்டம் கோபியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

Advertisement

”அதிமுகவை எம்ஜியார் துவக்கிய காலத்தில்  கிளை கழக செயலாளராக பணியை துவங்கினேன். எம்ஜியார் மாபெரும் வெற்றி தலைவராக அவர் இருந்தார். அன்று கோவையில் நடத்திய பொதுகுழுவை மிக சிறப்பாக நடத்தியத்தால்  என்னை பாராட்டினார்.  அவரது மறைவுக்கு பின் ஜெயலலிதா பொறுப்பேற்றார். அனைத்து மதத்தினரும் ஏற்றும் வகையில் சிறப்பாக ஆட்சி நடத்தினார். திராவிட கழக வீரமணியே ஜெயலிதாவை பாராட்டினார்.ஜெயலலிதா மறைவுக்கு பின்  சசிகலாவை தேர்ந்தெடுத்தோம். அதற்கு பிறகு எதிர்கட்சி தலைவர் கட்சியை வழிநடத்தினார். இந்த இயக்கத்திற்கு பல்வேறு சோதனைகள் வந்த போதும் நான் பணியாற்றியுள்ளேன். பல்வேறு வாய்ப்புகள் வந்த போது நான் ஏற்கவில்லை.

வருகின்ற தேர்தல் எவ்வளவு இக்கட்டண தேர்தல் என்பது அனைவருக்கு தெரியும். 2019 , 2021 ,2024 ,உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட எல்லா தேர்தல்களையும் பல்வேறு தோல்விகளை சந்தித்தோம். அன்று நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 தொகுதியில் வெற்றி பெற்றிருப்போம். பிரிந்து கிடந்தவர்கள் ஒன்று சேர வேண்டுமென்று வேலுமணி ,நத்தம் விஸ்வநாதன் ,தங்கமணி ,சண்முகம் ஆகியோர் சொன்னோம்.ஆனால் இன்றைய நிலைமை அப்படியில்லை. பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர வேண்டும். அவர்கள் எந்த நிபந்தனையும் வேண்டாம் என்றுசொல்கிறார்கள்.  மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டுமென்று நினைக்கிறார்கள். அப்போது பிரிந்து சென்றவர்களை  ஒன்று சேர்த்தால் தான் வெற்றி என்பது சாத்தியம். எந்த பொறுப்பும் தேவையில்லை என்று சொல்லும் அவர்களை இணைக்க வேண்டும்.  விரைந்து இவர்களை இணைத்தால் தான் தேர்தல் காலத்தில் வெற்றி என்பது சாத்தியம். அப்படி எந்த முடிவு எடுக்கவில்லை என்றால் பிரிந்து கிடந்தவர்களை ஒருங்கிணைப்போம்.

ஆறு மாதத்திற்கு முன்னர் கட்சி ஒருங்கிணைப்புத் தொடர்பாக இபிஎஸ்-ஐ சென்று சந்தித்து வந்தபிறகு என்னிடம் கட்சி தொடர்பான முக்கிய தகவல்களை அவர் பேசுவது இல்லை.  அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும். பேச்சுவார்த்தை ஒரு மாதம் கூட போகலாம். ஆனால் 10 நாட்களுக்குள் இதற்கான முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும். இல்லையென்றால் இதே மனநிலை கொண்டவர்களை ஒருங்கிணைத்து அந்த பணிகளை தொடர நேரிடும்”

என்று தெரிவித்தார்.

 

Tags :
ADMKEPSlatestNewsSenkottaiyanTNnews
Advertisement
Next Article