For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்கள் நாளைய முதலமைச்சர் என்று பேசுகிறார்கள்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்கள் நாளைய முதலமைச்சர் என்று பேசுகிறார்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
09:04 PM May 06, 2025 IST | Web Editor
“அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்கள் நாளைய முதலமைச்சர் என்று பேசுகிறார்கள்”   முதலமைச்சர் மு க  ஸ்டாலின் பேச்சு
Advertisement

சென்னை தேனாம்பேட்டையில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் ஏற்பாட்டில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 3000 பேர் திமுக-வில் இணைந்தனர்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, “ மற்ற கட்சியில் இருந்து 3000 பேர் திமுகவில் இணைவது மகிழ்ச்சி. நானும் டெல்டா காரன் தான், இந்த மண்ணின் மைந்தன் நான்.  மயிலாடுதுறையின் மாப்பிள்ளை நான், எப்போது மாப்பிள்ளை ஆக இருக்கக்கூடியவன் நான். ஒரு மாப்பிள்ளையாக இந்த நிகழ்ச்சியில் உங்களை நான் வரவேற்கிறேன்.

திமுக கட்சி தொடங்கும் பொழுது ஆட்சிக்கும் வரவேண்டும், ஆட்சி தான் ஆட்சி தான் என்று நாங்கள் நினைக்கவில்லை. நேற்று கட்சியை தொடங்கியவர்கள் தான் நாளை, நான் தான் முதலமைச்சர் என்று பேசக்கூடிய நிலை உள்ளது. அரசியல் அரிச்சுவடியை தெரியாதவர்கள் கூட நாளைய முதலமைச்சர் என்று பேசிக்கொள்கிறார்கள்.

கட்சி தொடங்கிய உடனே நான் தேர்தலில் களத்திற்கு வரவில்லை. 57-ல் தேர்தல் களத்திற்கு வந்தோம், திருச்சியில் அண்ணா மாநாட்டை வைத்து, ஒரு பெட்டியை வைத்து தேர்தலுக்கு போகலாமா என்று எழுதி போட சொல்லி பிறகு நாங்கள் தேர்தலுக்கு வந்தோம். பிறகு அண்ணா தேர்தலில் நிற்கலாம் என்று கூறினார்தேர்தலில் நின்று 15 இடங்களில் வெற்றி பெற்றோம். பிறகு இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றோம். அடுத்த தேர்தலில் ஐம்பது இடங்களில் வெற்றி பெற்றோம். அண்ணா தலைமையில் பிறகு ஆட்சி பொறுப்பேற்று தேர்தல் வாக்குறுதிகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டது.

இருமொழிக் கொள்கை சட்டமன்றத்தில் நிறைவேற்றம். தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட  தீர்மானம் நடைபெற்று பெயர் வைக்கப்பட்டது. அண்ணா மறைந்த பிறகு அந்த இடத்தை பூர்த்தி செய்ய கருணாநிதி தனது பணிகளை தொடங்கினார். அண்ணா நிறைவேற்றாத  திட்டங்களை அவர் தொடங்கினார்.  71 தேர்தலில் நின்று வெற்றி பெற்றோம், 25 ஆம் ஆண்டு ஆட்சி கலைக்கப்பட்டது.

13 ஆண்டு காலமாக ஆட்சிக்கு வர முடியாமல் 89 ஆம் ஆண்டு ஆட்சிக்குப் பிறகு வந்தோம்.  ராஜீவ் காந்தி கொலை வழக்கை வைத்து திமுக மீது குற்றம் சாட்டினார்கள். தேர்தலில் தோற்க வைத்தார்கள்.  மீண்டும் 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் முடிந்து ஐந்தாம் வருடத்தை தொடங்க உள்ளோம்.  ஆறு முறை தமிழகத்தில் வெற்றி பெற்று ஏழாவது முறையாகும் திமுக தான் வெற்றி பெற உள்ளது. நான் திமிராக சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். 74 ஆண்டுகளாக திமுகவை காப்பாற்றி வருகிறேன். இந்தியாவில் முதல் முறையாக மாநில கட்சியாக ஆட்சி அமைத்தது தமிழ்நாடு தான், இந்தியாவிற்கு வழிகாட்டக் கூடிய கட்சி திமுக.

மத்திய அரசிற்கு வழிகாட்டியாக இருக்கக்கூடிய அரசு இந்த திமுக அரசு. நம் ஆளுநர் ஒருவர் இருக்கிறார். என்னை பொறுத்த வரைக்கும் அப்படி ஒருவர் இருக்க வேண்டும் இருந்தால் தான் நல்லது. இவரே இருந்து விட்டுப் போகட்டும். ஆளுநருக்கு வருமானம் கொடுப்பது தமிழ்நாட்டில் வரி பணம் தான், அந்த ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஆளுநராக இருந்து கொண்டு எவ்வளவு அக்கிரமங்கள் செய்ய வேண்டுமோ செய்து வருகிறார். 90% தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது ஒரு சில வாக்குறுதிகள் தான் நிறைவேற்றப்படவில்லை, அதனையும் விரைவில் நிறைவேற்றுவோம். விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன் அப்பொழுது உங்களை எல்லோரையும் மாவட்ட செயலாளர்களுடன் நான் சந்திக்கிறேன். மாவட்டம் மாவட்டமாக வந்து சுற்றுப்பயணம் மூலம் நிர்வாகிகளை சந்திக்கிறேன்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement