For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”ஆணவக்கொலை புரிவோரை பயங்கரவாதிகளாகக் கருதித் தண்டிக்க வேண்டும்”- ரவிக்குமார் எம்.பி!

தூத்துக்குடி மென்பொறியாளர் கவின் ஆவணப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள விசிக பொது செயலாளர் ரவிக்குமார் ”ஆணவக்கொலை புரிவோரை பயங்கரவாதிகளாகக் கருதித் தண்டிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
07:06 PM Jul 29, 2025 IST | Web Editor
தூத்துக்குடி மென்பொறியாளர் கவின் ஆவணப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள விசிக பொது செயலாளர் ரவிக்குமார் ”ஆணவக்கொலை புரிவோரை பயங்கரவாதிகளாகக் கருதித் தண்டிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
”ஆணவக்கொலை புரிவோரை பயங்கரவாதிகளாகக் கருதித் தண்டிக்க வேண்டும்”  ரவிக்குமார் எம் பி
Advertisement

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த ஐடி  ஊழியரான கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்  விசிக பொதுச்செயலாளர்- ரவிக்குமார்  இச்சம்வத்தை கண்டித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

Advertisement

"தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் கட்டற்றுப் பெருகிவரும் சாதிவெறிக்குச் சான்றாக உள்ளது. ஒன்றிய அரசுக்கோ தமிழ்நாடு அரசுக்கோ ஆணவக் குற்றங்களைத் தடுப்பதில் அக்கறை இல்லை என்பதைக் கடந்த 10 ஆண்டுகளாக நடந்துவரும் நிகழ்வுகள் காட்டுகின்றன.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு ஆட்சி செய்தபோது, ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு வகைசெய்யும் சட்ட மசோதா ஒன்றை கடந்த 2012 ஆம் ஆண்டு இந்திய சட்ட ஆணையம் ஒன்றிய அரசிடம் வழங்கியது.
சட்ட ஆணையத்தால் உருவாக்கப்பட்ட’ சட்டவிரோதக் கூட்டம் ( திருமண சுதந்திரத்தில் தலையிடுதல் ) தடுப்புச் சட்டம் ‘( Prohibition of Unlawful Assembly (Interference with the Freedom of Matrimonial Alliances) Act ) என்ற அந்த சட்ட மசோதாவை காங்கிரஸ் அரசும் சட்டமாக்கவில்லை, அதன்பின் பொறுப்பேற்ற பாஜக அரசும் சட்டமாக்கவில்லை.

2016 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் அவர்கள் ஆணவக் கொலைகள் தொடர்பாக வழங்கிய தீர்ப்பில், தமிழ்நாட்டில் நடைபெற்ற 47 ஆணவக் கொலைகளை தேதிவாரியாகத் தனதுர பட்டியலிட்டுக் காட்டினார். ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் ஒன்பது கட்டளைகளையும் அவர் பிறப்பித்தார். உயர்நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை வழங்கி ஒன்பது ஆண்டுகள் ஆன பின்னரும்கூட தமிழ்நாடு அரசு இதுவரை அந்தக் கட்டளைகளை நிறைவேற்ற எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

2018 மார்ச் 27 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் ஆணவக் கொலைகள் தொடர்பாகத் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. ஆணவக் கொலையைத் தடுப்பதற்காகவும், அதனால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும் , அந்தக் குற்றத்தில் ஈடுபடுகிறவர்களைத் தண்டிப்பதற்காகவும் சிறப்புச் சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் இயற்றவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்படியொரு சட்டம் இயற்றப்படும் வரை ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்சநீதிமன்றம் வழங்கியது. ஆனால் அதுவும் தமிழ்நாடு அரசால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஆணவக் கொலை புரிவோரை பயங்கரவாதிகளாகக் கருதித் தண்டித்தால்தான் இந்தக் குற்றங்களை ஓரளவாவது கட்டுப்படுத்த முடியும். சமயத்தின் அடிப்படையில் மட்டுமல்ல சாதியின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் வெறிச்செயல்களும் பயங்கரவாதக் குற்றங்கள்தாம். அப்படி அணுகினால்தான் இந்தக் குற்றங்களைக் கொஞ்சமாவது கட்டுப்படுத்த முடியும்" என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement