”கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்” - பிரேமலதா விஜயகாந்த்
நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறித் தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி, கிட்னி திருட்டு நடந்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் நாட்டையே அதிர வைத்துள்ளது. இந்த நிலையில் ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி உடல் உறுப்புகளை விற்று வியாபாரம் செய்யும் கயவளுக்கு, உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் விசைத் தறி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். ஏழை தொழிலாளர்களை குறிவைத்து, புரோக்கர்கள் மூலம் மூளைச்சலவை செய்து, கிட்னி விற்பனை பல ஆண்டுகளாக நடந்துள்ளது. இது பெரும் கண்டனத்திற்கு உரியது. மேலும் "வறுமையின் காரணமாக கடனை அடைக்க என் கிட்னியை விற்றேன், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிட்னி எடுக்கப்பட்டது என்று பாதிக்கப்பட்ட ஒரு நபர் தெரிவித்து இருக்கிறார். ரியல் எஸ்டேட் செய்யும் புரோக்கர்கள் போன்று கிட்னி புரோக்கர்களாக மாறி இருக்கின்றார்கள். கிட்னியை விற்று, கிட்னி மோசடி விற்பனையில் ஈடுபட்டவர்கள் அனைவறையும் கண்டறிந்து உறிய தன்டனை வழங்க வேண்டும். இதில் ஒரு சில காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி உடல் உறுப்புகளை விற்று வியாபாரம் செய்யும் கயவர்களை கண்டறிந்து, உரிய தண்டனை வழங்கி, இந்த அரசு ஏழை மக்களுக்கு உதவிட வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்”
என தெரிவித்துள்ளார்.