”நெல்லை தெருவில் போட்டு முளைக்க விடுவது தான் இந்த ஆட்சியின் சாதனை”- சீமான் ஆவேசம்..!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் காவிரி டெல்டா மாவட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏறபட்டதால் பெரும் மதிப்பிலான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிட தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து எதிர்கட்சிகள் ஆளும் திமுக அரசின் அலட்சியத்தால் தான் விவசாயிகளுக்கு இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”அரசு டாஸ்மாக்கில் விற்கும் சரக்குகளை கிடங்குகள் அமைத்து பாதுகாத்து வருகிறது. ஆனால் உணவு தேவையான நெல்லை கொள்முதல் செய்யாமல் மழையில் நனைய விட்டு முளைக்க வைக்கிறது. நெல்லை தெருவில் போட்டு முளைக்க விடுவது தான் இந்த ஆட்சியின் சாதனை.
கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சி காலத்தில் சேமிப்பு கிடங்கு கட்டியிருந்தால் நெல் வீதியில் கிடந்திருக்குமா?
வாக்களர் திருத்த பட்டியல் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற திருமாவளவன் கருத்தை நான் வரவேற்கிறேன்.
திமுகவிடமிருந்துதான் நாம் நாட்டை காக்க வேண்டும்” என்றார்.