"இந்த கூட்டம் ஓட்டல்ல, ஆட்சியாளர்களுக்கு வைக்கும் வேட்டு"- ரைமிங்கான பதிலடி கொடுத்த விஜய்!
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் உரையாற்றிய கட்சியின் தலைவர் விஜய், அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் விமர்சகர்களின் கருத்துகளுக்குத் தனது பாணியில் பதிலடி கொடுத்தார்.
மாநாட்டில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களைப் பார்த்து, "இந்தக் கூட்டம் வெறும் ஓட்டா... தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு வைக்கும் வேட்டா... நம்மை கோட்டைக்கு அழைத்துச் செல்லும் ரூட்டா இருக்கப்போகிறது" என ரைமிங்காகப் பேசி பெரும் கைதட்டலைப் பெற்றார்.
விஜயின் இந்த வார்த்தைகள், வெறும் அரசியல் கூட்டமாக இல்லாமல், வரவிருக்கும் தேர்தலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று தொண்டர்களிடம் நம்பிக்கையை விதைத்தது. வழக்கமாக, அரசியல் விமர்சகர்கள் ஒரு புதிய கட்சியின் கூட்டத்தைப் பார்த்து, அது ஓட்டுகளாக மாறுமா என்ற சந்தேகத்தைக் கிளப்புவார்கள்.
அதை நேரடியாகக் குறிப்பிடாமல், விஜய் தனது ரசிகர் கூட்டத்தை அரசியல் சக்தியாக மாற்றும் திட்டத்தை உறுதிப்படுத்தினார். அவரது பேச்சு, கட்சியினர் மத்தியில் ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டம், வெறும் ஆதரவு திரட்டும் நிகழ்வு அல்ல, அது எதிர்கால ஆட்சி மாற்றத்திற்கான ஒரு தொடக்கம் என்பதை அவர் தனது பேச்சின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.