For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'டியூட்' படத்தின் கதை இதுதான்.. பாடல் பாடியது ஏன்? - பிரதீப் ரங்கநாதன் பேச்சு

'டியூட்' படத்தின் கதை குறித்து நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியுள்ளார்.
01:11 PM Oct 15, 2025 IST | Web Editor
'டியூட்' படத்தின் கதை குறித்து நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியுள்ளார்.
 டியூட்  படத்தின் கதை இதுதான்   பாடல் பாடியது ஏன்    பிரதீப் ரங்கநாதன் பேச்சு
Advertisement

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள திரைப்படம் 'டியூட்'. இப்படத்தில் மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் தீபாவளியை ஒட்டி வரும் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், இந்​தப் படத்​தின் இசை வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. இதில், படக்​குழு​வினர் கலந்து கொண்​டனர். தொடர்ந்து, விழா​வில், பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது,

Advertisement

"லவ் டுடே சமயத்தில் இந்த பட இயக்குனர் வந்து கதை சொன்னார். அவருக்கு ஏகப்பட்ட பேர் சிபாரிசு செய்தனர். கதை பிடித்து இருந்ததால் நானும் ஓகே சொன்னேன். காதல் மற்றும் சமூக கருத்துகளை கமர்ஷியலாக கதை விவரிக்கிறது. நான் நடித்த லவ்டுடே, டிராகன் படங்கள் 100 கோடி வசூலித்தது. இந்த படமும் அப்படி வசூலிக்கும் என நம்புகிறேன். திருமணம், அதற்கு பின் நடக்கும் வாழ்க்கை, விட்டுக்கொடுப்பது, எது மகிழ்ச்சி உட்பட பல விஷயங்களை டியூட் பேசுகிறது.

என்னிடம் கதை சொல்லிவிட்டு, இன்னொரு ஹீரோவை வைத்து படம் இயக்குவதாக அவர் சொன்னார். பின்னர் என்னிடமே படம் வந்தது. இயக்குனர் உற்சாகமாக வேலை செய்தார். மமிதா பைஜூ கேரக்டர் வித்தியாசமாக இருக்கும். லவ்டுடேயில் நடிப்பது மிஸ் ஆகிவிட்டது. இதில் இணைந்துவிட்டோம். இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் ஆல்பம் ஹிட்டானதால் அவரை படத்தில் கொண்டு வந்தோம். இப்போது அவர் ஏகப்பட்ட படங்களில் இசையமைப்பது மகிழ்ச்சி.

நீண்ட காலமாக எனக்கு பாடுகிற ஆர்வம் இருந்தது. என் பட பாடல்களை நானே பாடி அனுப்புவேன். ஆனால் எந்த பாடகரும் எனக்கு பாட வாய்ப்பு தரவில்லை. ஆனால், சாய் அபயங்கர் எனக்கு பாட வாய்ப்பு கொடுத்தார். இப்படத்தில், சரத்குமார் முக்கியமான வேடத்தில் வருகிறார். அவரின் வயதை கேட்டு மிரண்டுவிட்டேன். அவர் குடிப்பது போல நானும் காலையில் பீட்ரூட் ஜூஸ் குடிக்கிறேன். ரோகிணி அம்மாவாக நடித்துள்ளார். என்னை சிலர் உருவகேலி செய்கிறார்கள். அதை நான் கண்டுகொள்வது இல்லை. மக்கள் கொடுத்த அன்பு நிறைவாக உள்ளது.

ரஜினி, கமல் இணையும் படத்துக்கு இயக்குநர் முடிவாகவில்லை. என்னிடம் அந்த படத்துக்கான கதை இல்லை, அவர்கள் பெரிய ஸ்டார். அவர்களை இணைத்து படம் இயக்குவது சாதாரண விஷயமல்ல. நான் இப்போது நடிப்பதில் அதிக ஆர்வம் செலுத்துகிறேன். தீபாவளிக்கு பல படங்கள் பார்த்து ரசித்து இருக்கிறேன்.
நான் நடித்த படம் இந்த ஆண்டு வருவது ரொம்ப மகிழ்ச்சி. தீபாவளிக்கு எல்ஐகே படம் வராதது நல்லது. என்னுடைய இரண்டு படங்கள் வந்தால் இரண்டு படங்களின் வசூலும் பாதித்து இருக்கும்"

இவ்வாறு நடிகர் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement