“கேக்காம கொடுக்குற சாமி இது”... உத்திரகோசமங்கை கும்பாபிஷேக விழா - ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை!
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை (ஏப்.4) உள்ளூர் விடுமுறை...
09:22 PM Apr 03, 2025 IST | Web Editor
Advertisement
உத்திரகோசமங்கை கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாளை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருள்மிகு ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நாளை (04.04.2025) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளைய விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வரும் 10ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.