“இது எங்க பாரம்பரியம்” - சங்கராந்தியை முன்னிட்டு பன்றி சண்டை நடத்தும் கிராம மக்கள்!
ஆந்திராவில் சங்கராந்தியை முன்னிட்டு பன்றி சண்டையை கிராம பொது மக்கள் பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர்.
மகர சங்கராந்தி, பொங்கல் ஆகியவற்றை முன்னிட்டு ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, எருது விடும் திருவிழா, மாடு பிடிக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு
நிகழ்ச்சிகளை அந்தந்த பகுதி மக்கள் தங்களுடைய பாரம்பரியம் என்று கூறி நடத்தி மகிழ்கின்றனர். ஆந்திராவின் கோதாவரி மாவட்டங்களில் சங்கராந்தியை முன்னிட்டு பெரிய அளவில் சேவல் சண்டை நடத்துவது வழக்கம்.
ஆனால் மேற்கு கோதாவரி மாவட்டம் குஞ்சனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இதுதான் எங்கள் பாரம்பரியம் என்று கூறும் வகையில் சங்கராந்தியை முன்னிட்டு பன்றி சண்டை போட்டியை நடத்துகின்றனர்.
சங்கராந்தி அன்று சண்டை போடுவதற்காகவே அப்பகுதி மக்கள் பன்றிகளை வளர்க்கின்றனர். மேலும் சண்டைக்காக தாங்கள் வளர்க்கும் பன்றிகளுக்கு அந்த
பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறப்பு பயிற்சிகளை அளிக்கின்றனர். அந்த பயிற்சிகளின் அடிப்படையில் அந்த பன்றிகள் மைதானத்தில் சண்டை போடுகின்றன. நடத்தப்படும் போட்டியில் வெற்றி பெறும் பன்றிகளுக்கு வெகுமதிகளும் உண்டு.