Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகளை இந்த பட்ஜெட் முன்னேற்றும்” - பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு!

02:00 PM Feb 01, 2024 IST | Jeni
Advertisement

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்நாட்டின் 4 தூண்களான இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகளை முன்னேற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.  நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.

இதையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.  இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன்,  தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

இந்நிலையில்,  இடைக்கால பட்ஜெட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றில் அவர் பேசியதாவது :

“இந்த இடைக்கால பட்ஜெட் அனைவரையும் உள்ளடக்கியது. புதுமையானது.  நம் நாட்டின் 4 தூண்களான இளைஞர்கள்,  ஏழைகள்,  பெண்கள் மற்றும் விவசாயிகளை இந்த பட்ஜெட் முன்னேற்றும்.  2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான உத்தரவாதத்தை இந்த பட்ஜெட் அளித்துள்ளது.

நாட்டின் இளைஞர்களை பிரதிபலிப்பதாக இந்த இடைக்கால பட்ஜெட் அமைந்துள்ளது. இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.  ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதிப் பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்து,  மூலதனச் செலவுக்காக, ரூ.11.11 லட்சம் கோடி வரலாறு காணாத அளவில் வழங்கப்பட்டுள்ளது.  பொருளாதார வல்லுநர்களின் மொழியில், இதனை 'ஸ்வீட் ஸ்பாட்' என்று கூறலாம்.  இதன்மூலம் இளைஞர்களுக்கு எண்ணற்ற புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இதையும் படியுங்கள் : 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்..! - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

இந்த பட்ஜெட், ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை முன்னேற்றும். அவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும்.  வருமான வரி விலக்கு திட்டம்,  நடுத்தர வகுப்பைச் சேர்ந்த 1 கோடி பேருக்கு நிவாரணம் அளிக்கும்.  இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன"

 

Tags :
#budgetsession#financeminister#NirmalasitaramanBudgetBudget2024FinanceBudgetIndiaInterimBudgetloksabhaNarendramodiparlimentPMModiPMOIndiarajyasabha
Advertisement
Next Article