For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருவண்ணாமலை தீபம்: மலையேறும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

11:25 AM Nov 22, 2023 IST | Web Editor
திருவண்ணாமலை தீபம்  மலையேறும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
Advertisement

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தையொட்டி மலையேறும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Advertisement

திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளான 26.11.2023 அன்று காலை 5.00 மணிக்கு திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு முதலில் வரும் 2,500 பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வரிசை கிரமமாக புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும்.  குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்தவர்கள் முதல் அதிக பட்சம் 60 வயது உள்ளவர்கள் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். 

இதையும் படியுங்கள்:  வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை தடுத்து நிறுத்திய பூனை! – சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

மலை ஏற அனுமதி கோரும் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அரசு அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகல் மற்றும் மருத்துவ அலுவலரிடம் உடல் தகுதி சான்று பெற்றுக்கொள்ள வேண்டும்.  கோயில் கோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள்.  மற்ற வழிகளில் மலை ஏற கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது.  மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 

மேலும், காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும்போது திரும்ப  கொண்டு வர வேண்டும்.  மலை ஏறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அமைதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் கடந்த 17- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை தொடங்கியது. நவ. 26-ஆம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

Tags :
Advertisement