திருவள்ளுவர் தினம் - சென்னையில் இறைச்சி கடைகளை மூட உத்தரவு!
ஜன.15ஆம் தேதியன்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இறைச்சி கடைகள் மூடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
திருவள்ளுவர் தினம் (15.01.2025) அன்று, சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்படும்.
வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.#ThiruvalluvarDay #ThooimaiChennai #ChennaiCorporation #HereToServe pic.twitter.com/DShbj6fHjc
— Greater Chennai Corporation (@chennaicorp) January 13, 2025
“திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வருகின்ற 15.01.2025 புதன்கிழமை அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்படவுள்ளன.
எனவே, இறைச்சிக் கடை வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவினை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.