For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருநெல்வேலி | நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவர் வெட்டிக்கொலை - 4 பேர் அதிரடி கைது!

02:55 PM Dec 20, 2024 IST | Web Editor
திருநெல்வேலி   நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவர் வெட்டிக்கொலை   4 பேர் அதிரடி கைது
Advertisement

நெல்லையில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்தனர். 3 தனிப்படை வைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவர் ஒரு வழக்கு விசாரணைகாக ஆஜராக வந்துள்ளார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் நின்ற மாயாண்டியை திடீரென 4 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்தது. அப்போது அவர் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக கும்பலிடம் இருந்து தப்புவதற்கு நீதிமன்ற வளாகத்தில் ஓடினார். இருப்பினும் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தி சென்று சரமாரியாக வெட்டியது. இதில் கை, கால் மற்றும் முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து 4 பேர் கொண்ட அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் இளைஞரை 4 பேர் வெட்டிக்கொலை செய்த இச்சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழிக்கு பழியா இல்லை வேறு ஏதேனும் காரணமா என்று பல கோணத்தில் போலீசார் விசாரித்த வருகின்றனர். இதுகுறித்த விசாரணையில் கொலையில் ஈடுபட்ட மேலும் 3 நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Tags :
Advertisement