Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”விஜயின் அரசியல் வருகைக்கு பின் திருமாவளவனின் எண்ண ஓட்டம் மாறிவிட்டது” - அண்ணாமலை பேட்டி..!

விஜயின் அரசியல் வருகைக்கு பின் திருமாவளவனின் எண்ணம் ஓட்டம் மாறிவிட்டது என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
06:28 PM Oct 12, 2025 IST | Web Editor
விஜயின் அரசியல் வருகைக்கு பின் திருமாவளவனின் எண்ணம் ஓட்டம் மாறிவிட்டது என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Advertisement

பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில்
செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

Advertisement

”சமீபத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள  ஒரு தனியார் மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மருந்துகளால் மத்திய பிரதேசத்தில் சிந்துவாரா மாவட்டத்தில் 23 குழந்தைகளும், ராஜஸ்தானில் 3 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு அரசு இரண்டு டிரக் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்துள்ளது.  இதன் மூலமாக தமிழக அரசுக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

தமிழகத்திற்கு வந்த சிறப்பு புலனாய்வு குழு இந்த டிரக்ஸ் கண்ட்ரோலர்களை எல்லாம் கைது செய்யக்கூடாது என்பதற்காக  இரண்டு பேரை கைது செய்துள்ளார்கள். முதலமைச்சர் இதைப்பற்றி பேச வேண்டும். இந்திய மருந்தியல் ஆணையத்தின் பயிற்சி வகுப்புகளில் தமிழகத்தைச் சேர்ந்த டிரக்ஸ் கண்ட்ரோலர்கள் யாரும் பங்குபெறவில்லை

திருமாவளவன் அவர்களையும் அவர் கூட இருப்பவர்களையும் இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கு அனுப்ப வேண்டும். விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் திருமாவளவனின் அரசியல் எண்ணம் ஓட்டம் மாறிவிட்டது. தேவையில்லாமல் என்னை வம்பு இழுத்திருக்கிறார். எனக்கு இது தானா வேலை.

மாதிரி பட்டியல் அரசாணையில் கலைஞர் பெயர் இருக்கிறது. ஏன் எம்ஜிஆர் பெயர் இல்லை, ஏன் ஜெயலலிதா இல்லை, முத்துராமலிங்க தேவர் பெயர் இல்லை எத்தனையோ பட்டியலின தலைவர்கள் உள்ளனர்.  ஒரு பெயரை கூட காணவில்லை. சிதம்பரம் அவர்களுக்கு திடீர் ஞான உதயம் வந்துவிட்டது. ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டாருக்கு பிறகு சீக்கியர்களை தேடி தேடி கொல்லப்பட்டதை  மறந்து விட்டாரா..?

கோயம்புத்தூருக்கு பாலத்தின் பெயர் ஜிடி நாயுடு என்ற பெயர் வைத்ததற்கு அதிலும் சிலர் நாயுடு என்று பெயர் எப்படி வந்தது என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.  அங்கு ஜி டி என்றால் யாருக்கும் தெரியாது.

தனி கட்சி தொடங்குவதாக இருந்தால் பத்திரிக்கையாளர்களிடம் பிள்ளையார் சுழி போட்டு தான் தொடங்குவேன்” என்று பேசியுள்ளார்.

 

Tags :
AnnamalailatestNewsthirumavalavanTNBJPTNnewsTVKVijay
Advertisement
Next Article