Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு திருமாவளவன் எம்.பி. நேரில் ஆறுதல்

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
03:38 PM Jul 02, 2025 IST | Web Editor
போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
Advertisement

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்காலிகமாக அஜித்குமார் (29) என்பவர் பணிபுரிந்து வந்தார்.  இந்த கோயிலுக்கு வந்த பெண்ணின் காரில் இருந்த நகை மாயமான சம்பவம் தொடர்பாக அஜித்குமார் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். தொடர் விசாரணையின் போது அவர் காவல்நிலையத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதற்கிடையே, காவல்துறையினர் அஜித்குமாரை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

இதையும் படியுங்கள் : பாமக எம்.எல்.ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம் – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்தாகவும், அவரின் கண், வாய் உள்ளிட்ட இடங்களில் மிளகாய்ப்பொடி தூவி துன்புறுத்தப்பட்டதாகவும் உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அஜித்குமாரின் வீட்டிற்கு சென்ற திருமாவளவன் அவரின் புகைப்படத்திற்கு மலர்தூரி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, அவருடன் வந்தவர்கள் 2 நிமிடம் அமைதியாக இருந்து அஞ்சலி செலுத்தினர். அஜித்குமாரின் த

Tags :
AjithkumarAjithkumar CaseLatest NewsPolicesivagangathirumavalavanVCK
Advertisement
Next Article