For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு - கட்டுப்பாடுகள் என்னென்ன?

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
10:24 AM Jul 06, 2025 IST | Web Editor
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு   கட்டுப்பாடுகள் என்னென்ன
Advertisement

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா ஏற்பாடுகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி,

Advertisement

* 6ம் தேதியான இன்று பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.
* 7ம் தேதி குடமுழுக்கு நிறைவுக்குப் பின் பக்தர்கள் அனுமதிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.
* ஏழாம் தேதி முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும்.
* குடமுழுக்கு காண வரும் பக்தர்களுக்காக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மார்க்கமாக மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு.
* பாதுகாப்பு பணியில் 6000 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
* 25 மருத்துவக் குழுக்களும், 27 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
* குடமுழுக்கு விழா பணிகளுக்காக மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதல் பொறுப்பு.
* ஏழாம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement