"ஊடகங்களில் தங்கம் விலை கூறுவது போல் கொலை நிலவரங்கள் கூறுகிறார்கள்" - எடப்பாடி பழனிசாமி!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா அலுவலகம் எதிரே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" பரப்புரையை துவங்கினார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "அரக்கோணம் சட்டமன்ற தொகுதி அண்ணா திமுகவின் கோட்டை. அடுத்து ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அண்ணா திமுக வெற்றி பெறும்.
திமுக என்பது கார்பரேட் கம்பேனி ஆக மாறியுள்ளது. திமுக கட்சி அல்ல கார்பரேட் கம்பேனி. உங்களுடன் ஸ்டாலின் என்ற முகாமை தொடங்கி மக்களைத் தந்திரமாக ஆசைகளை காட்டி ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்காக ஸ்டாலின் மாடல் அரசு அரங்கேற்றம் நடக்கிறது.
அரசாங்கம் மக்களுக்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அதை முறையாக செயல்படுத்திய அரசாங்கம் அண்ணா திமுக ஆட்சியில் 75 கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தோம். ஒரே ஆண்டில் பதினோரு மருத்துவ கல்லூரிகள் மருத்துவமனைகள் கொண்டு வந்தது அண்ணா திமுக அரசாங்கம் வரலாற்று சாதனை படைத்தது. அண்ணா திமுக அரசாங்கம் தான்.
வேளாண்மை நிறைந்த கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்த ஒரே அரசாங்கம் அண்ணா திமுக தான். பேரிடர் காலங்களில் மழை வெயில் புயல். இதனால் விவசாயிகள் பயிர்கள் பாதிக்கப்பட்டால் அதிகமாக தொகையை இழப்பீடாக கொடுத்தது அண்ணா திமுக ஆட்சியில் மட்டும் தான்.
அண்ணா திமுக ஆட்சி இருந்தபோது சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. தினந்தோறும் பத்திரிகை ஊடகங்களிலும் தங்கம் விலைகள் கூறுவது போல் கொலை நிலவரங்கள் பெரும்பாலும் குறிப்பிட்டு வருகின்றன. இதுபோல் இருக்கும் மோசமான ஆட்சி தொடர வேண்டுமா? மக்கள் நினைத்தால் தான் ஆட்சிக்கு வர முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம். மக்கள் தான் எஜமானர்கள். 2026ல் மக்கள் நல கூட்டணி தான் வெல்லும். மக்களின் முகத்தில் அண்ணா திமுக வெற்றி பிரகாசமானதாக உள்ளது.
கொரோனா காலம் ஒரு வருடம் மக்களுக்கு வேலை இல்லை மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்று ரேஷன் கடையில் விலை இல்லா அரிசி, விலை இல்லா சக்கரை விலை இலவசமாக கொடுத்த ஒரே அரசாங்கம் அண்ணா திமுக ஆட்சி மட்டும் தான். தைப்பொங்கல் என்று 2500 ரூபாய் கொடுத்து அண்ணா திமுக ஆட்சியில் தான். அரக்கோணம் நகரத்திற்கு 110 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் கொடுக்கப்பட்டிருந்தது" என்று தெரிவித்துள்ளார்.