”கடைசி வரை கேட்பீர்களா என சின்ன டவுட் இருந்தது” - தொண்டர்களுடன் தவெக தலைவர் விஜய் கலகல பேச்சு!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கு கோவை அருகே குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முன்னதாக இவ்விழாவில் விஜய் பேசியபோது, இதற்கு முன்பு நிறை பேர் வந்து சென்று பொய் சொல்லியிருக்கலாம். மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்திருக்கலாம். அதற்காக நான் இங்கு வரவில்லை. அதை இனிமேல் நடக்காது. நம் கட்சி மேல் நம்பிக்கை கொண்டு வரப்போவது பூத் லெவல் ஏஜென்ட்ஸ் நீங்கதான். நீங்க ஒவ்வொருத்தரும் ஒரு போர் வீரருக்கு சமம். நம்ம ஏன் வந்திருக்கிறோம், எதுக்கு வந்திருக்கிறோம், எப்படிப்பட்ட ஆட்சி அமைக்க போகிறோம் என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்று தனது கட்சியின் பூத் லெவல் ஏஜென்ட்க்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பேசினார்.
இந்த நிலையில் பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கு முடிவுற்றதையடுத்து, இறுதியாக தொண்டர்களுக்கு விஜய் நன்றி தெரித்தார். அப்போது அவர் கூறியதாவது, “இந்த கூட்டத்தில் பேசுவதை நீங்கள் கடைசி வரை கேட்பீர்களா என எனக்கு சின்ன டவுட் இருந்தது. ஆனால் வேற லெவல் நீங்க. ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் சொன்னதை நீங்கள் கடைசி வரை கேட்டதற்கு ரொம்ப ரொம்ப நன்றி” இவ்வாறு அவர் கூறினார்.