சபாநாயகரை கே.பி.முனுசாமி ஒருமையில் பேசியதால் சட்டப்பேரவையில் சலசலப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சபாநாயகருக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதையடுத்து சபாநாயகர் அப்பாவு மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது கே.பி.முனுசாமி, சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சட்டசபையில் கே.பி.முனுசாமி சபாநாயகர் அப்பாவுவை ஒருமையில் பேசியதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
சபாநாயகர் அப்பாவு பேசுகையில், 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு நிதி கொடுக்க வில்லை. அப்போது எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமியை பேசவிடவில்லை என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவையில் இருந்த துரைமுருகன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம், "ஒரு முடிவோடு வந்திருக்கிறீர்களா? சபாநாயகர் அனுமதியோடு தான் பேச வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர், சபாநாயகரிடம் அனுமதியோடு பேச வேண்டும்" என்றார்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அவை முனைவர் நடு நிலையோடு செயல்பட வேண்டும். நிதி இல்லை என்று தெரிந்தும். தேவை இல்லாமல் நிறைவேற்ற முடியாத அறிவிப்பு எல்லாம் வெளியிட்டு உள்ளனர் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கடும் அமளி ஏற்பட்டது.