தந்தையை மிஞ்சிய மகன் இருக்க கூடாது - பாமக அரசியல் சூழ்நிலையை மறைமுகமாக கூறிய அமைச்சர் சிவசங்கர்!
கங்கை முதல் கடாரம் கொண்டான் வரை படையெடுத்து வெற்றி பெற்ற மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நேற்று நடைபெற்ற அரசு விழாவில் நிதிதுறை அமைச்சர் தங்கம்தென்னரசு, செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன், சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன், தமிழக போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் சிவசங்கர், "இங்கு ராஜேந்திர சோழன் பிறந்தநாளை கொண்டாடுகிறோம் என்றால், பல்வேறு காரணங்கள் இருக்கிறது. பல மன்னர்கள் காலம்காலமாக வளர்ந்த பகுதியை முன்னேற்றம் அடைய செய்ய பல்வேறு முயற்சிகளை செய்து இருப்பார்கள். ஆனால் ராஜேந்திர சோழன் மட்டும் காட்டை திருத்தி பல மக்கள் வாழுகிற பகுதியாக மாற்றி இருக்கிறார் என்று கூறினார். மேலும் இங்கிருந்து படையெடுத்து சென்று பல வெற்றிகளை பெற்றவர் என்றும், மேலும் இவ்வளவு வெற்றிகளை பெற்றவர்.
இந்த கோவிலை வடிவமைத்தபோது தனது தந்தையின் ராஜராஜ சோழன் வழிவந்த ராஜேந்திர சோழன் தஞ்சை கோவிலை போல கட்ட வேண்டும் என்று முயற்சித்தாலும், மேலே கோபுர பணிகள் வடிவமைத்த போது ராஜேந்திர சோழனுக்கு சிறு சங்கடம், தந்தையை மிஞ்சிய மகனாக இருந்து விட கூடாது என கோபுரத்தின் அளவை குறைத்தவர் ராஜேந்திரசோழன் என கூறினார்.
அதேபோல், தம்முடைய முதல்வரும் அப்படி தான் என்று கூறினார். மேலும் தற்போது நடக்கும் அரசியல் சூழ்நிலையில் கங்கை கொண்ட சோழனின் செய்தியை பலரும் காதில் வாங்கி செயல்பட வேண்டிய நேர கூறினார். தற்போது பாமகவில் நடக்கும் அரசியல் சூழ்நிலையை குறிப்பிட்டு அமைச்சர் சிவசங்கர் பேசியது குறிப்பிடதக்கது.