“கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திட்டம் இல்லை” - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற 15வது சுகாதாரத்துறை மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோவையில் மத்திய அரசின் நிதி உதவியுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
பின்னர், இது தொடர்பான எந்த செய்தியும் இல்லாத நிலையில், நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், தமிழ்நாட்டை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் கோவையில், எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க சாத்தியக்கூறுகளை மத்திய அரசு ஆராய்ந்துள்ளதா? என எழுத்துப் பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ்,
“பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா” திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலையில் கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க எந்த திட்டமும் இல்லை என தெரிவித்துள்ளார்.