For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தமிழ்நாட்டில் 3வது அணிக்கு இடமில்லை” - துரை வைகோ பேட்டி!

தமிழ்நாட்டில் 3வது அணிக்கு இடமில்லை என துரை வைகோ பேட்டியளித்துள்ளார்.
08:09 PM May 18, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் 3வது அணிக்கு இடமில்லை என துரை வைகோ பேட்டியளித்துள்ளார்.
“தமிழ்நாட்டில் 3வது அணிக்கு இடமில்லை”   துரை வைகோ பேட்டி
Advertisement

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வீரகேளம்புதூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வருகை தந்த மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Advertisement

அப்போது அவர் கூறுகையில் “தமிழ்நாட்டில் திமுக இக்கட்டான சூழ்நிலையில் , நிதி நெருக்கடி கால கட்டத்தல் ஆட்சி பொறுப்பை ஏற்றது. 4 ஆண்டு ஆட்சி காலத்தில் திமுக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. பெரும்பாலான தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றி உள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது அனைத்து அரசியல் இயக்கங்களின் இலட்சியம், ஆசையாகவும் இருக்கலாம்.

மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் வேரூன்ற நினைக்கும் கால கட்டத்தில் எந்த வித குழப்பத்திற்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்பதில் மதிமுக உறுதியாக உள்ளது. திமுக தலைமையிலான வலுவான இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் உள்ளது. இதில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை மதிமுக விரும்ப வில்லை.

திமுக கூட்டணியில் மதிமுகவிற்கான அங்கீகாரத்தை நாங்கள் எதிர்பார்ப்போம்.
திமுக தலைமையிடம் நாங்கள் அதை முறையிடுவோம். தமிழ்நாட்டில் சீட் எண்ணிக்கையை வைத்துதான் திமுக உடன் கூட்டணி என்பது இல்லை. மதவாத சக்திகள் தமிழ்நாட்டை அச்சுறுத்துகின்ற சூழல் உள்ள நிலையில் மதவாத சக்திகளை எதிர்ப்பது திமுக தலைமை தான்.

அதற்காக திமுக கூட்டணியில் நாங்கள் சேர்ந்துள்ளோம். தமிழ்நாட்டின்
எதிர்காலத்திற்காக திமுகவுடன் எங்கள் கூட்டணி தொடரும் . தவெக தலைவர் நடிகர் விஜயை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன்
கூட்டணி கிடையாது என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் திமுக அணி அல்லது அதிமுக அணி என்ற நிலைப்பாடு உள்ளது. இதில் 3 வது அணிக்கு இடமில்லை”

இவ்வாறு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ பேசியுள்ளார்.

Tags :
Advertisement