"திரைமறைவில் யாரையும் சந்தித்து பேச வேண்டிய அவசியம் இல்லை" - அண்ணாமலை பேட்டி!
கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
"யுகாதி பண்டிகை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை என மூன்றாவது ரயில் செல்வதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார். கோவை ராமேஸ்வரம் நேரடி ரயில் சேவை கொண்டுவர ஆலோசிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விரைவில் அறிவிப்பார் என நம்புகிறேன். அதிமுக பாஜக கூட்டணி தொடர்பாக பேச விரும்பவில்லை, அரசியல் களம் எப்படி உள்ளது என்பதை நான் பிரதிபலித்துள்ளேன். கருத்துக் கணிப்பில் 27 சதவீதம் தான் தற்போதைய முதலமைச்சருக்கு கிடைத்துள்ளது.
தென் தமிழகத்தில் விவசாயம் நலிவடைந்துள்ளது. எப்படி தமிழகம் உள்ளது என்பதை கூறியுள்ளேன். எந்த ஒரு தலைவரும் மீதும் எந்த ஒரு கட்சியின் மீதும் எனக்கு கோபம் இல்லை. டெல்லியில் பேசும் போது தொண்டராகவும் பணியாற்ற தயார் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளேன். எதற்காக அரசியலுக்கு வந்தேனோ அதே உணர்வோடு தற்போது இருக்கிறேன். தலைவர்களிடம் நடுநிலையோடு தமிழக அரசு நிலை குறித்து எடுத்துக் கூறி வந்துள்ளேன் இனி அவர்கள் முடிவெடுப்பார்கள். கூட்டணி தொடர்பாக அமித்ஷா தெரிவித்துள்ள கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
தமிழ்நாடு முதன்மையாக இருக்க வேண்டும் பாஜகவில் வளர்ச்சி இருக்க வேண்டும், யாரை பற்றியும் கடுமையாக விமர்சிக்கவில்லை, கருத்துக்களை கருத்ததுக்காக எதிர்கொண்டுள்ளேன். தமிழகத்தின் அரசியலாக இருக்கட்டும் எங்களது கருத்துக்களை வலிமையாக சொல்ல வேண்டும் அதற்காக கூறியிருந்தேன்.
உள்துறை அமைச்சரை எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பதில் எந்த தவறும் இல்லை. பாஜகவில் திரைமறையில் யாரையும் சந்தித்து பேசும் அவசியம் இல்லை. செங்கோட்டையன் சந்தித்ததாக யூகத்தின் அடிப்படையில் செய்திகள் வந்துள்ளன. செங்கோட்டையனுக்கு y பிரிவு பாதுகாப்பு கொடுப்பதுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை அது குறித்து எனக்கு தெரியவில்லை.
விஜய் எதற்காக அரசியல் வந்துள்ளார், யாரை எதிர்க்கிறார், என்ன காரணத்துக்காக அரசியல் செய்கிறார் என்பதற்கு ஏற்ப தவெக தலைவர் விஜய் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார் அதனை வரவேற்கிறேன்,
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் திமுக ஆட்சியில் முறைகேடு நடைபெறுகிறது. தமிழகத்தை விட பின் தங்கிய கிராமப்புறம் அதிகம் கொண்ட மாநிலங்கள் உள்ளன. 4 ஆண்டுகள் ஆந்திரா, கர்நாடகா, குஜராத், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலஙக்ளுக்கு குறைவாக கொடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் ஊழலை விட தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊழல் உள்ளது. போலி கணக்கு எழுதுவதால் மெட்டீரியல் பில் குறைவாகவும், ஊதிய பில் அதிகமாகவும் உள்ளது இதற்கு கடிதம் எழுத உள்ளேன். தமிழகம் முழுவதும் ஆடிட் செய்து யாரெல்லாம் இதனை திருடினார்களோ, கிராம சபை கூட்டி பிரதமர் மோடிக்கு எதிராக கொடி பிடிக்க வைக்கிறார்கள். ஊடகம் 100 நாள் வேலை திட்ட ஊழல் குறித்து பெரிதாக எடுத்துப் பேச வேண்டும்.
பாஜகவில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. சி வோட்டர் கருத்துக்கணிப்பில் முதலமைச்சர் வேட்பாளராக என்னை அறிவிக்க முடியும், நான்காவது இடத்தை பிடித்து உள்ளேன். சட்டம் ஒழுங்கில் முதலமைச்சரின் வெள்ளையறிக்கை வெளியிடவில்லை. வன்கொடுமை தடுப்புச் சட்டம் 6% குறைந்துள்ளதாக முதல்வர் எந்த தரவுகளை பார்த்து தெரிவிக்கிறார்.
இன்னொரு கட்சியை அழித்து பாரதிய ஜனதா கட்சி வளர்ந்தால் அதுவும் அழிந்துவிடும் என ஏற்கனவே சொல்லியுள்ளேன், தானாக வளரும் கட்சியே நிலைத்து நிற்கும் பிற கட்சியை அழித்து வளரும் அவசியம் பாஜகவிற்கு இல்லை. எத்தனை பிரச்சனை வந்தாலும் வைராக்கியம் தன்மானத்தை விட்டுத்தரமாட்டேன். அதிமுக, பாஜக கூட்டணியில் கட்சிதான் முதன்மை அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை பார்க்கலாம் என் நிலைப்பாடு மாற்றமில்லை" என தெரிவித்துள்ளார்.