"ஆகஸ்டு 9ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவிற்கும், பாமகவிற்கும் தொடர்பில்லை" - ராமதாஸ் தரப்பில் விளக்கம்!
பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏதோ ஒரு கார்ப்பரேட் அமைப்பால் ஆகஸ்டு 9 ம் தேதி நடை பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழுவிற்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் சம்பந்தம் கிடையாது. ஏனெனில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் ஒப்புதலின்றி கூட்டப்படும் கூட்டம்.
இது பாமக பொதுக்குழு என அறிவிக்கப்பட்டதே சட்ட விரோதமானது. 17 வருடங்களாக பாமகவினரையும் மற்றும் அப்பாவி வன்னியர்களை ஏமாற்றியது போதும், இனியாவது அய்யா தலைமை ஏற்று 2026 தேர்தலை சந்திப்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.