Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை...! - பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அறிவிப்பு!!

01:05 PM Feb 01, 2024 IST | Jeni
Advertisement

நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  வருமான வரி விதிப்பு விகிதங்களில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் தற்போதைய நிலையே தொடரும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பான அவரது அறிவிப்புகள் பின்வருமாறு :

இதையும் படியுங்கள் : 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்..! - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Tags :
#budgetsession#financeminister#NirmalasitaramanBudgetBudget2024FinanceBudgetIndiaInterimBudgetloksabhaNarendramodiparlimentPMModiPMOIndiarajyasabha
Advertisement
Next Article