“தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை!” - எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!
“தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொள்ளாச்சியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,
“அதிமுக பிரிந்து இருக்கிறது என்று கூறுகிற முதலமைச்சர் ஸ்டாலின் பொள்ளாச்சி கூட்டத்தில் வந்து பாருங்கள். அதிமுகவை உடைக்க நினைத்த உங்களின் கனவு தூள்தூளாக உடைக்கபட்டது. பேட்டி கொடுத்தே மக்களை ஈர்க்கப் பார்க்கிறார் ஒருவர். விமானத்தில் ஏறும்போது பேட்டி, இறங்கும்போது பேட்டி.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை. 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை மேடையில் நின்று பேசுகிறேன். 3 ஆண்டுகள் திமுக அரசு செய்த சாதனைகளை பேச தயாரா?. திமுக என்பது கட்சி அல்ல. கார்ப்பரேட் நிறுவனம். குடும்ப அரசியல் நடத்தி வருகின்றனர். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என திமுகவில் வாரிசு அரசியல் நடக்கிறது.
மேகதாது அணை விவகாரத்தில் அண்ணாமலை வாய் திறக்காதது ஏன்? மேகதாது விவகாரத்தில் தேர்தலுக்காக, சட்டத்தை மதிக்காமல் பாஜக செயல்படுகிறது" என தெரிவித்தார்.