Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தமிழகத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் எவ்வளவோ உள்ளது" - தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் !

தமிழகத்தில் தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகள் எவ்வளவோ உள்ளது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
10:09 AM Mar 10, 2025 IST | Web Editor
Advertisement

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

Advertisement

"தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு மாநிலங்கள் தலைவர்களை சென்று சந்திப்பார்கள் என்றும் அதற்காக 7 மாநிலங்கள் செல்ல வேண்டும் என்றும் நேற்றைய அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சொல்லியிருக்கிறார்.

முதலமைச்சரே முதலில் உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை தொகுதிக்கு ஒழுங்காக செல்ல சொல்லுங்கள் ஓட்டளித்த மக்களுக்கு நன்றி கூட சொல்ல தங்கள் தொகுதிக்கு செல்லவில்லை. முதலில் வாக்களித்த நாடாளுமன்ற மக்களை சந்திக்க சொல்லுங்கள் பின்பு மற்ற மாநில மக்களை சந்திக்கலாம்

முதலில் தங்கள் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பிரச்சனைகளை பேச சொல்லுங்க பின்பு தொகுதி வரையறை பற்றி பேசலாம். தமிழகத்தில் தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்க. இல்லாத ஒரு பிரச்சினையைப் பற்றி கூட்டம் நடத்தி வேறு மாநிலங்களுக்கு செல்ல சொல்கிறீர்கள்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா தொகுதி வரையறையில் தமிழகம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று சொன்ன பின்பும் அன்றாட தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பல பிரச்சனைகளை மறைப்பதற்கு இந்தப் பிரச்சினையை கையில் எடுத்திருப்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். உங்கள் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
BJPCriticismproblemstamil nadutamilisai soundararajantweetunresolved
Advertisement
Next Article