For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்க எந்த விதமான முன் வரைவுகளும் இல்லை" - ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன்

04:57 PM Nov 17, 2023 IST | Web Editor
 ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்க எந்த விதமான முன் வரைவுகளும் இல்லை    ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன்
Advertisement

"ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் துவங்குவது குறித்து ஓஎன்ஜிசி நிறுவனமோ மற்றும் தனியார் நிறுவனங்களோ எந்தவிதமான விண்ணப்பங்களும் செய்யவில்லை"  என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

Advertisement

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன்
தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.  இதில் மாவட்டம்
முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.  அப்போது தமிழ்நாடு
விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துராமு கோரிக்கை மனு கொடுத்தார்.
அதில் தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை
அமல்படுத்த முயற்சி நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்: முடிவுக்கு வருகிறது வெயிட்டிங் லிஸ்ட்? 3000 புதிய ரயில்கள் இயக்கம்- ரயில்வே அறிவிப்பு…

அதிலும் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 26 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் ஒஎன்ஜிசி நிறுவனம் மூலம் செயல்படுத்த இருப்பதாக அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளது.  இதனை ராமநாதபுரம் மாவட்டத்தில் துவங்க கூடாது,  இங்கு விவசாயமும், கடல் வளமும் நம்பியே பொதுமக்கள் உயிர் வாழ்கின்றனர்.  ஆகவே இந்த திட்டம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.  வறட்சியான ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தை தடுக்க லட்சக்கணக்கானோர் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளனர்.

ஆகவே மாவட்ட நிர்வாகம் இதனை அமல்படுத்தக் கூடாது என விவசாயிகள் சங்க கூட்டத்தில் எச்சரிக்கை விடப்பட்டது.

இதையே மற்ற விவசாயிகளும் தெரிவித்தனர்.  இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் கூறுகையில், "ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் துவங்குவது குறித்து ஓஎன்ஜிசி நிறுவனமோ மற்றும் தனியார் நிறுவனங்களோ எந்தவிதமான விண்ணப்பங்களும் செய்யவில்லை.  ஆகவே இந்தத் திட்டத்திற்கு எந்த விதமான முன் வரைவுகளும் இல்லை" என தெரிவித்தார்.

Tags :
Advertisement