For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கெளரவிக்கப்பட்ட தேனிசை தென்றல் தேவா,,!

தமிழ் இசையமைப்பளர் தேனிசைத் தென்றல் தேவாவை நாடாளுமன்றத்தில் அவைத்தலைவர் இருக்கையில் அமரவைத்து, செங்கோல் தரப்பட்டு கெள‌ரவிக்கப்பட்டுள்ளார்.
09:11 PM Sep 26, 2025 IST | Web Editor
தமிழ் இசையமைப்பளர் தேனிசைத் தென்றல் தேவாவை நாடாளுமன்றத்தில் அவைத்தலைவர் இருக்கையில் அமரவைத்து, செங்கோல் தரப்பட்டு கெள‌ரவிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கெளரவிக்கப்பட்ட தேனிசை தென்றல் தேவா
Advertisement

தமிழ் சினிமாவின் இசை ஜாம்வான்களில் ஒருவர் தேனிசைதென்றல் தேவா ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் என  தேவா சுமார் 400 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார்.

Advertisement

இந்த நிலையில் சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற தேவாவை அந்நாட்டிலுள்ள ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் அந் நாட்டு நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அவரைநாடாளுமன்ற சபாநாயகரின் இருக்கையில் அவரை அமர வைத்து, தமிழ் கலாச்சாரத்தின் பாரம்பரிய சின்னமான செங்கோல் கொடுத்துக் கெளரவித்தனர்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் தேவா இன்று அதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளது,

"ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் எனக்களித்த மரியாதை குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.

எனக்கும் எனது இசைக்கலைஞர்கள் குழுவிற்கும் இவ்வளவு அரிய கௌரவத்தை வழங்கியதற்காக அன்புள்ள திரு. லாரன்ஸ் அண்ணாதுரை மற்றும் ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

செப்டம்பர் 24ம் தேதி மாலையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்பட்டு, அவைத்தலைவர் இருக்கையில் அமர வாய்ப்பு அளிக்கப்பட்டு, மரியாதைக்குரிய செங்கோல் வழங்கப்பட்டது. இந்த தருணம் எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இசை மற்றும் கலாச்சாரத்தை பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் இது சொந்தம்.

எனது அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு இந்த பெருமைமிகு தருணத்தில் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது 36 ஆண்டுகால இசைப் பயணத்தில் உங்கள் அன்பும் ஆதரவும் எனது மிகப்பெரிய‌ பலமாக இருந்து வருகிறது. இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement