Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி ரூ.64 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் திருட்டு!

01:54 PM Nov 12, 2023 IST | Student Reporter
Advertisement

விக்கிரவாண்டி அருகே வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி, ரூ.64 ஆயிரத்திற்கு பட்டாசை அபகரித்துக்கொண்டு, காரில் தப்பிச்சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை அருகே வாசு என்பவர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அரசு எம்பலத்துடன் வருமான வரித்துறை அதிகாரி போல் ஒருவர் வந்து 64 ஆயிரம் ரூபாய்க்கு பட்டாசுகளை வாங்கியுள்ளார்.

அப்போது கூகுள் பே மூலம்  பணத்தை தருவதாக கூறியுள்ளார். பணத்தை அனுப்பும் போது நெட்வொர்க பிரச்னையாக இருக்கிறது, பின்னர் அனுப்பிவிடுகிறேன் என்று கூறிவிட்டு காரில் பட்டாசு பாக்சுகளை எடுத்து வையுங்கள் என பட்டாசு கடை உரிமையாளரிடம் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை; 13வது நாளாக மணிமுத்தாறு அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!

அதனை நம்பி கடை உரிமையாளர் பட்டாசுகளை காரில் எடுத்து அடுக்கி வைத்துள்ளார். பட்டாசுகளை காரில் வைத்தவுடன் நெட்வொர்க் சரியாக இயங்காததால் காரில் பணம் வைத்துள்ளேன், எடுத்து தருவதாக கடைக்காரரிடம் கூறிவிட்டு காருக்கு சென்றிருக்கிறார் அந்த அடையாளம் தெரியாத நபர். பின்னர் பட்டாசு வாங்கியதற்கான பணத்தை தராமல் அங்கிருந்து காரினை எடுத்து கொண்டு வேகமாக சென்றுள்ளார்.

இதனையடுத்து கடை உரிமையாளர் இருசக்கர வாகனத்தை எடுத்து சென்று பட்டாசு வாங்குவது போல் நடித்து ஏமாற்றியவரை பிடிக்க முயன்றுள்ளார். ஆயினும் அந்த அடையாளம் தெரியாத நபர் பின்னர் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Tags :
DiwalifakeincometaxofficerfestivaloflightfirecrackersPoliceTamilNaduvikravandiVillupuram
Advertisement
Next Article