Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கரூர்: பள்ளி மாணவியை ஏமாற்றிய நபர் போக்சோ சட்டத்தில் கைது!

09:19 AM Feb 19, 2024 IST | Web Editor
Advertisement

குளித்தலை பகுதி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை அப்பகுதி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

கரூர் மாவட்டம், குளித்தலை பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவியை யோகி என்ற இளைஞர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் பாலியல்ரீதியாக உறவு வைத்துள்ளார். இதனால் அந்த சிறுமி மூன்று மாத கர்ப்பமான நிலையில் இதுகுறித்து அறிந்த அவரது குடும்பத்தினர், குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், யோகி அந்த சிறுமியை கர்ப்பமாக்கியதை உறுதி செய்த பின்னர் அந்த இளைஞரை கைது செய்து கரூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். விசாரணைக்கு பின்னர் அந்த இளைஞரை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குளித்தலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
#kulithalaiArrestkarurNews7Tamilnews7TamilUpdatespocso
Advertisement
Next Article