“இளைஞர்களுக்கு நம் கலாச்சாரம் தெரியாமல் போய்விட்டது” - நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!
இளைஞர்களுக்கு நம் கலாச்சாரம் தெரியாமல் போய்விட்டது என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
09:26 PM Apr 30, 2025 IST | Web Editor
Advertisement
லதா ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீ தயா ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தும் ‘பாரத சேவா’ தொடக்க விழா சென்னையில் இன்று(ஏப்.30) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் பேசியதாவது, “இந்த செல்ஃபோன் யுகத்தில் இளைஞர்கள், ஏன் சில பெரியவர்கள் கூட, நம் பாரத நாட்டின் மகோன்னதமான சம்பிரதாயம், அதன் கலாச்சாரம், அருமை, பெருமையெல்லாம் அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது.
அதற்கான அறிவில்லாமலே சென்றுகொண்டிருக்கிறார்கள். மேற்கத்தியர்கள் அவர்களின் கலாச்சாரம் சம்பிரதாயத்தில் சந்தோஷம் கிடைக்கவில்லை என்று கூறி, இந்தியாவின் பக்கம் வந்து கொண்டிருக்கின்றனர். யோகா போன்ற வாழ்வியலை அவர்கள் நாடுகிறார்கள்.
Advertisement
எனவே, நம் பாரத நாட்டின் மகோன்னதனமான கலாச்சாரம், சம்பிரதாயம், அருமை, பெருமையை கொண்டு போய் இளைஞர்களிடம் சேர்க்க வேண்டும், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக லதா எடுக்கும் அனைத்து முயற்சிகளும் ஆண்டவன் அருளால் வெற்றியடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்”
இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.