For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தடை செய்யபட்ட மலை பகுதிக்கு சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!

04:20 PM Mar 16, 2024 IST | Web Editor
தடை செய்யபட்ட மலை பகுதிக்கு சென்ற இளைஞர் சடலமாக மீட்பு
Advertisement

தடைசெய்யப்பட்ட கொலக்கம்பை செங்குட்டுவராயன் மலை ஏற சென்ற இளைஞர் மாயமான நிலையில் தற்போது 300 அடி பள்ளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளார்.

Advertisement

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை செங்குட்டுவராயன் மலைக்கு
நேற்று மாலை 10 இளைஞர்கள் தடைசெய்யப்பட்ட பகுதிக்கு மலை ஏற்றத்திற்க்காக
சென்றுள்ளனர்.  அப்போது அனைவரும் மலையில் ஏறி கொண்டிருக்கும் போது மலையில் இருந்து தேனீக்கள் கூடு கலைந்துள்ளதாக கூறப்படுகிறது.  மலையேற்றத்தில் இருந்த இளைஞர்கள் தேனீக்களை கண்டு பயந்து ஓடிச்சென்றதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : “கைது செய்யப்பட்டது சட்டவிரோதம்- எதிர்த்துப் போராடுவேன்” – கேசிஆர் மகள் கவிதா!

பின்னர்,  மலையில் இருந்து இறங்கும் போது அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.  அதில்
திண்டுக்கல் அருகே கோபால்பட்டியை சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர்
திடீரென மாயமாகி உள்ளார்.  இதையடுத்து அவருடன் சென்ற நண்பர்கள் பிரவீனை
கூச்சலிட்டும், தவறுதலாக எங்கேனும் விழுந்து உள்ளாரா என தேடி பார்த்துள்ளனர்.

எங்கு தேடியும் நீண்ட நேரமாக கிடைக்காத நிலையில், உடனே கொலக்கம்பை
காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.  பின்னர் தீயணைப்பு துறைக்கும் தகவல்
கொடுத்துள்ளனர்.  அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும்
காவல்துறையினர் இரவு நேரம் என்பதாலும்,வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும்
என்பதாலும் செங்குட்டுவராயன் மலைக்கு செல்லும் பாதி வழியிலேயே திரும்பி
உள்ளனர்.

இதையடுத்து,  இன்று காலை முதல் மாயமான இளைஞரை தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டனர்.  தற்போது செங்குட்டுவராயன் மலை பகுதியில் உள்ள 300 அடி பள்ளத்தில் ட்ரோன் கேமிரா உதவியுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளார்.

Tags :
Advertisement