'எம்மி' விருதை தட்டிச் சென்ற இளம் நடிகர்!
நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு 'அடோலசென்ஸ்' (Adolescence) என்ற தொடர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இத்தொடர் குழந்தை வளர்ப்பு மற்றும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிகள் குழந்தைகளை எவ்வாறெல்லாம் பாதிக்கிறது என்பதை காட்டியிருந்தது. இத்தொடர் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இத்தொடரில் நடித்த ஓவன் கூப்பர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
இதற்கிடையே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்களுக்கான எம்மி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் 'அடோலசென்ஸ்' இணையத் தொடரில் நடித்த 15 வயது சிறுவனான ஓவன் கூப்பர், சிறந்த துணை நடிகருக்கான எம்மி விருதை வென்று அசத்தியுள்ளார்.
இதன் மூலம் இந்த விருதை வென்ற இளம் ஆண் நடிகர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். மேலும், 'ஹேக்ஸ்' ஹொடரில் நடித்த சேத் ரோஜென் சிறந்த முன்னணி நடிகருக்கான விருதையும், ஜீன் ஸ்மார்ட் சிறந்த முன்னணி நடிகைக்கான விருதையும் வென்றனர். சிறந்த துணை நடிகைக்கான விருதை ஹன்னா ஐன்பிண்டர் வென்றுள்ளார்.